நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
Health benefits of amla
நெல்லிக்காய் அதியமான் அவ்வைக்கு கொடுத்தார் என்று நாம கேள்வி பட்டிருப்போம், ஏன் நெல்லிக்காய் கொருதாருனு தெரியுமா ? ஏன் என்றால் நெல்லிக்காயில் மற்ற எந்த கனிலும் இல்லாத அளவுக்கு அதிகமான நன்மைகள் இருக்கு என்று நம் முன்னவர்கள் தெரிஞ்சு வாய்திருந்தார்கள்.
நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி காணலாம்.
நெல்லிக்காய்
100 கிராம் நெல்லிக்காயில்
கார்பஹைட்ரேட் - 10 கிராம்
பைபர் - 4.5 கிராம்
புரோடின் - 1 கிராம்
எனர்ஜி - 45 கிலோ கலோரி
வைட்டமின் ஏ , வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ பொற்ற வைட்டமின்களும்
ஐயன் ( iron) மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைந்தது நெல்லிக்காய்.
நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்புச் சக்தி ( improve immunity )
Health benefits of amla in tamil
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் சளி இருமல் சலதோசம் போன்ற நோய்கள் அடிக்கடி வராமல் தடுக்கும்.
சளி ஏற்கனவே உள்ளவர்கள் நெல்லிக்காய் சாற்றை குடிக்க சளி தீரும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிப்பது விட்டமின் சி
இது அனைத்து பழங்களிலும் காணப்படுகின்றது.
விட்டமின் சி அனைத்து பழங்களிலும் விட மிக அதிக அளவில் நெல்லிக்காயில் காணப்படுகிறது. இதற்கு அடுத்த படியாக கொய்யாவில் அதிகமாக விட்டமின் சி உள்ளது.
செரிமான மண்டலம் ( good for gut )
நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.
மேலும், மல சிக்கல் பிரட்சனையை சரி செய்ய நெல்லிக்காய் பெரிதும் உதவி செய்கிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதல் நம் குடலில் நல்ல பாக்டீரிய அளவை அதிகரிக்க உதவுகிறது.
முடி வளர்ச்சி ( good for hair )
நெல்லிக்காய் தலை முடி பிரட்சனைகல் அனைத்திற்கும் தீர்வாக அமைகிறது.
நெல்லிக்காயில் உள்ள தாது உப்புக்கள் வைட்டமின்கள் நம் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர தலை முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் மென்மையாகவும் வளர உதவி செய்கிறது.
மூளை ( good for brain )
நெல்லிக்காயில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் நம் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பலபடுத்தி செயல் திறனை அதிகரித்து நியபக திறனை அதிகரிக்க உதவுகிறது.
Amla health benefits students
குழந்தைகள் மாணவர்கள் நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் நியபக சக்தி அதிகரிக்கும் பரிட்சையில் அதிக மதிப்பெண் பெற உதவும்.
இதயம் ( amla health benefits in heart )
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
கொழுப்பின் அளவை கட்டு படுத்துவதால் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய் ( good for diabetes )
நெல்லிக்காயில் உள்ள பைபர் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக அதிகரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுகுல் வைக்க முடியும்.
மேலும் சில நன்மைகள்
நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள மற்ற சத்துகளை முழுவதும் உறிஞ்ச
பெரிதும் உதவுகிறது.
இரும்பு சத்து உணவுகள் சாப்பிட்ட பின் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.
இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
நெல்லிக்காய் பக்க விளைவுகள் ( amla side effects )
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பார்த்தோம்.
தினமும் 3 - 4 நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் இரைப்பையில் அதிக அளவில் அமிலம் சுரந்து அசிடிட்டி நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெல்லிக்காய் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நெல்லிக்காயில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களில் உள்ள எனமல் பாதிப்படையும் ஆதலால் நெல்லிக்காய் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிகமாக நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்தம் உறைதல் தாமதமாகும் பிரட்சனை ஏற்படுகிறது.
எனவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

.jpeg)
.png)
.jpeg)
கருத்துரையிடுக
0கருத்துகள்