சூப்பரான சிக்கன் கறி குழம்பு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்
c
Restaurant style chicken kulambu tamil
எல்லோருக்கும் வணக்கம் இன்னைக்கு நாம ரொம்ப ஸ்சுவையான சிக்கன் குழம்பு எப்டி செய்யலனு பாக்கலாம்.
சாதம்,சப்பாத்தி, பரோட்டா,இட்லி மற்றும் தோசை எல்லாத்துக்கும் பொருத்தமான இந்த சிக்கன் குழம்பு எப்டி சமைக்கலனு பாபோம்.
சிக்கன் குழம்பு செய்முறை
1 1/4 கிலோ சிக்கன் எடுத்துக்கங்க அதுல 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
1 டீஸ்பூன் மஞ்சள் + 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் + 4 டேபிள்ஸ்பூன் புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்.( படத்தில் உள்ளவாறு)
1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பேன்ல 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும்
3 துண்டு பட்டை+ 4 கிராம்பு + 1 நட்சத்திர சோம்பு + 4 ஏலக்காய் + கொஞ்சம் கல் பாசி சேர்த்து வதக்கவும்.( படத்தில் உள்ளவாறு)
30 நொடி வதக்கிய பின் 6 வரமிளகாய் + 8 பல் பூண்டு + கொஞ்சம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
30 நொடி பிரடி விடவும் இதில் 1 கை அளவு சின்ன வெஙகாயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து 4 டேபிள்ஸ்பூன் மல்லி + 1 டேபிள்ஸ்பூன் மிளகு சேர்த்து 30 நொடி கிண்டி விடவும்.
பின்னர் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் + 1டேபிள்ஸ்பூன் அரிசி + 1 டீஸ்பூன் சோம்பு + 4 கொத்து கறிவேப்பிலை. சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.( படத்தில் உள்ளவாறு)
நன்றாக வரு பட்டபின் ஒரு பிளேட்டில் ஆர வைத்து விட்டு பின் மிக்சியில் அரைத்து அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துகொள்ளவும் .( படத்தில் உள்ளவாறு)
அடுததபடியாக
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 2 பட்டை + 2 ஏலக்காய் + 2 கிராம்பு + கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.( படத்தில் உள்ளவாறு)
200 கிரம் பெரிய வெஙகாயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் 200 கிராம் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.(படத்தில் காட்டியவாறு).

தயார் பண்ணி வைத்த சிக்கன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.1/2 லிட்டர் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்துக்கிளறுங்கள். அளவான சூடுல 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மிக்சியில் 1/2 கப் தேங்காய்தூள் + 1 டீஸ்பூன் சோம்பு + 2 டீஸ்பூன் ஊறவைத்த சோம்பு + 2 டேபிள்ஸ்பூன் ஊறவைத்த முந்திரி பருப்பு சேர்த்து அறைசுகலம்.
குழம்பு கொதிக்கும்போது அரைத்து வைத்த தேங்காய்ப்பால் + கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலக்கி விடவும். கடைசியாக 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் மால்லி இலை தூவி இறக்கவும்.
5 பேர் சாப்ட போதுமானது. செய்துபார்கவும்..... நன்றி











கருத்துரையிடுக
0கருத்துகள்